- செய்திகள், வணிகம்

மூன்றாம் தரப்பு காப்பீடு பிரீமியம் 40 சதவீதம் வரை அதிகரிப்பு கார் இன்சூரன்ஸ் கட்டணம் உயருகிறது

சென்னை, மார்ச் 30:-

2016-17-ம் நிதி ஆண்டுக்கான கார் இன்சூரன்ஸ் கட்டணம் உயருகிறது. மூன்றாம் தரப்பு காப்பீடு பிரீமியத்தை 40 சதவீதம் வரை காப்பீடு ஒழுங்குமுறை, மேம்பாட்டு ஆணையம் (இரிடா) உயர்த்தியுள்ளது.

2 வகைகள்
நம் நாட்டில்  வாகன காப்பீட்டு  திட்டத்தில் 2 வகை  உள்ளது. 1) தங்களுடைய சொந்த வாகனத்திற்கு ஏற்படக் கூடிய  சேதத்திற்கு இழப்பீடு வழங்கும் காப்பீட்டு திட்டம். 2) மூன்றாம் தரப்பினருக்கு ஏற்படக்கூடிய சேதத்திற்கு இழப்பீடு வழங்கும்  காப்பீட்டு திட்டம். இதில், மூன்றாம் தரப்பு வாகன காப்பீடு  கட்டாயமாகும். மூன்றாம் தரப்பு காப்பீட்டு திட்டத்தின் மூலம் பாலிசிதாரரால் மூன்றாம் நபருக்கு ஏற்படும் நிரந்தர ஊனம், இறப்பு மற்றும் பொருட்சேதங்களுக்கு இழப்பீடு வழங்க இயலும்.

இழப்பீடு கோரிக்கைகள் எண்ணிக்கை, காப்பீடு நிறுவனங்களின் இழப்பு விகிதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் காப்பீடு பிரீமியத்தை (கட்டணம்) இரிடா மாற்றி அமைக்கிறது. அந்த வகையில் தற்போது 2016-17-ம் நிதி ஆண்டுக்கு காப்பீடு பிரீமியத்தை உயர்த்தியுள்ளது. மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் பிரீமியத்தை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

பிரீமியம் குறைப்பு

1,000 சி.சி.க்கு குறைவான, 1,000 சி.சி.-1,500 சி.சி. திறன் கொண்ட வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியத்தை அதிக அளவாக 40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கான் இன்சூரன்ஸ் பிரீமியத்தை 9.6 சதவீதம் முதல் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில், 350 சி.சி.க்கு மேல் திறன் கொண்ட மோட்டார் சைக்கிளுக்கான பிரீமியத்தை 10 சதவீதம் குறைத்துள்ளது. ேமலும், பொது சரக்கு வாகனங்களுக்கான பிரீமியத்தில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

வாகனங்கள்                        இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்வு

கார்கள்

1,000 சி.சி. குறைவான திறன்        40 சதவீதம்

1,000-1,500 சி.சி. திறன்                         40 சதவீதம்

செடான்                              25 சதவீதம்

இரு சக்கர வாகனங்கள்

75 சி.சி.க்கு குறைவான திறன்     9.6 சதவீதம்

75-150 சி.சி. திறன்                15 சதவீதம்

150-350 சி.சி. திறன்               25 சதவீதம்

தனியார் ஆட்டோக்கள்           3.2 சதவீதம்

இன்சூரன்ஸ் பிரீமியம் குறைப்பு

இரு சக்கர வாகனங்கள்

350 சி.சி.க்கு மேல் திறன்          10 சதவீதம் குறைப்பு

தனியார் சரக்கு வாகனங்கள் (7,500 கிலோவுக்கு குறைவான)     10 சதவீதம் குறைப்பு

Leave a Reply