- செய்திகள், மாவட்டச்செய்திகள்

மூதாட்டியிடம் நகை பறிப்பு

அம்பத்தூர, பிப்.13:-

சென்னை அடுத்த அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் அன்பு நாயகம் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி ஜெகதாம்பாள் (53). தம்பதிகள் இருவரும் அம்பத்தூரில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சி சென்று விட்டு இரவு வீடு திரும்பினர். இவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஜெகதாம்பாள் கழுத்தில் இருந்த 16 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டு தப்பி சென்று விட்டார். ராமதாஸ் அளித்த புகாரின் பெயரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Leave a Reply