- செய்திகள்

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 120 அடியாக உயர்வு…

 

தேனி, ஜூலை 29- முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளது.
அணை
முல்லை பெரியாறு அணை பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் 21 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தேக்கடியில் 23 மி.மீ மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு 740 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 120.10 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 511 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
நீர்மட்டம் உயர்வு
வைகை அணை பகுதியில் அதிகபட்சமாக 29 மி.மீ மழை பெய்துள்ளது. அணைக்கு 438 கனஅடி தண்ணீர் வருகிறது. 60 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நீர்மட்டம் 27.43 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 58.22 அடி, வரத்து 15 கனஅடி, திறப்பு 3 கனஅடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 35.60 அடி, வரத்தும், திறப்பும் இல்லை. மருதாநதி அணை பகுதியில் 7 மி.மீ, சோத்துப்பாறை 10 மி.மீ, மஞ்சளாறு 5 மி.மீ, உத்தமபாளையம் 1 மி.மீ, சண்முகாநதி 1 மி.மீ மழை பெய்துள்ளது.

Leave a Reply