- கன்னியாகுமரி, செய்திகள், மாவட்டச்செய்திகள்

முருகன் குன்றம் கோவிலில் நிலாச்சோறு விருந்து சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு…

கன்னியாகுமரி, ஏப்.20
கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று நிலாச்சோறு விருந்து நடக்கிறது.
சிறப்பு வழிபாடுகள்
கன்னியாகுமரி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பழத்தோட்டம் அருகில் அமைந்துள்ளது முருகன்குன்றம். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 35-வது சித்ரா பவுர்ணமி விழாவும் 26-வது நிலாச்சோறு விருந்து விழாவும் சித்ரா பவுர்ணமி தினமான நாளை நடக்கிறது. இதையடுத்து அதிகாலை 5 மணி தொடங்கி சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடக்கின்றன.  பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
பாதுகாப்பு
மாலை 6 மணிக்கு லட்சார்ச்சனை நிறைவு மற்றும் சிறப்பு வழிபாட்டிற்கு பின்னர் மாலை 6.30  மணிக்கு நிலாச்சோறு விருந்து தொடங்குகிறது. நிலாச்சோறு நிகழ்ச்சியில் பங்குபெற  கன்னியாகுமரி  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முருகன்குன்றம் வருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply