- சினிமா, செய்திகள்

முருகதாசின் புதிய பட நாயகி

 

இந்தியில் சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கும் `அகிரா' படத்தை ஏறக்குறைய முடித்து விட்ட ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்து மகேஷ்பாபு தமிழிலும் தெலுங்கிலும் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு சாய்பல்லவி, கீர்த்திசுரேஷ் இருவரில் ஒருவருக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. கீர்த்தி சுரேஷ் தமிழிலும் தெலுங்கிலும் தனது வெற்றிப் படங்கள் மூலம் அறிமுகமானவர். `பிரேமம்' என்ற ஒரே யொரு மலையாளப் படம் மூலம் தென்னகம் முழுக்க தெரிந்த முகமாகி விட்டவர் சாய்பல்லவி. தற்போது மணிரத்னத்தின் புதிய படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இரு மொழிப் படம், அதுவும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், தயாரிப்பு என்பதால் யாருக்கு வாய்ப்பு கிட்டும் என்று தெரியாமல் இருவருமே டென்ஷனில் நகம் கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply