- ஆன்மிகம்

மும்மத சிந்தனை

உன்னத பதம் – 9
பரமபுருஷரின் தோற்றம் பற்றிய உண்மையை அறிந்தவன் ஜடத்தளையினின்றும் ஏற்கனவே விடுதலை பெற்று விடுவதால், தற்போதைய பெளதிக உடலை நீத்த உடனேயே இறைவனின் நாட்டுக்குத் திரும்பி விடுகின்றான்.  ஜடக்கட்டினின்றும் ஆத்மாவின் இத்தகு விடுதலை எளிதானதே அல்ல.  அருவவாதிகளும், யோகிகளும் பற்பல பிறவிகளுக்கும், துன்பங்களுக்கும் பிறகே விடுதலை பெறுகின்றனர்.  இறைவனின் ப்ர்ஹ்மஜோதியில் கலப்பது எனும் அவர்களது முக்தியும் அபூர்வமானதே. ஏனெனில், மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்பும் ஆபத்து அவர்களுக்குண்டு.  ஆனால், பக்தரோ இறைவனின் உடல், செயல்களின் தெய்வீக இயல்பை அறிவதாலேயே இவ்வுடலை நீத்தபின் இறைவனின் பரமபதத்தை அடைந்து மீண்டும் இப் பெளதிக உலகிற்கு திரும்பி வரும் ஆபத்திலிருந்து விடுபட்டு விடுகின்றனர்.
பகவானிடம், ''பரப்ர்ஹ்மனும் முழு முதற் கடவுளும் நீரே" என்று கூறி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை உணர்ந்தறிபவன், நித்தியமாக விடுதலை பெற்றவன் என்பது நிச்சயமே.

பாக்கியமுள்ள ஜனம்!
“இஸ்ரவேலே, நீ பாக்கியவான்” (உபா. 33:29).
நீங்கள் யார்? கர்த்தர் உங்களை எவ்வாறு காண்கிறார்? கிறிஸ்துவுக்குள் உங்களுக்குள்ள சிலாக்கியம் என்ன? ஆம், நீங்கள் பாக்கியவான்கள். பாக்கியமான வாழ்க்கைக்கு வேதப் புத்தகம் வழிகாட்டுகிறது. ‘பாக்கியவான்கள்’ என்பதற்கு ‘பேர் பெற்றோர், மேன்மை பெற்றோர், ஆசீர்வாதம் உள்ளவர்கள்’ என்பது அர்த்தமாகும். உண்மையிலேயே கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனங்கள், பாக்கியமானவர்கள் (சங். 144:15).
அநேகர், பாக்கியம் என்றால் பணம், பொருள், அந்தஸ்து, கார், வீடு, பங்களா என்று எண்ணி விடுகிறார்கள். ஆனால், இதைப் பார்க்கிலும் தேவ பிரசன்னம், தேவ சமுகம், தேவ வல்லமை, தேவ கிருபை, தேவ காருண்யம், தெய்வீக சந்தோஷம், தெய்வீக சமாதானம் எவ்வளவு பெரிய பாக்கியங்கள்! நித்திய ஜீவனைப் பெற்று, பரலோகத்திற்கு கடந்து செல்வது, எவ்வளவு மகிமையான பாக்கியம்! இம்மைக்குரிய பாக்கியத்தைப் பார்க்கிலும், நித்தியத்திற்குரிய பாக்கியங்கள் ஆயிரமாயிரம் மடங்கு மேன்மையானவை. “அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே. 1:3).

ஆன்மாவைப் பற்றி…
தீமை புரியத் தூண்டும் ஆன்மா!
(இறைத்தூதர் யூஸுஃப் கூறினார்): – ''நான் என்னைத்  தூய்மையானவன் எனக் கூறிக் கொள்ளவில்லை. ஏனெனில், மனித ஆன்மா தீயவற்றை அதிகமாகத் தூண்டிவிடக்கூடியதாகும்; ஆனால் எவருக்கு இறைவன் கருணை புரிந்தானோ அவருடைய ஆன்மாவைத் தவிர!" (திருக்குர் ஆன் 12:53)
இடித்துரைக்கும் ஆன்மா!  (தீமை செய்யும்போது கண்டிக்கும் ஆன்மா) திருக்குர் ஆன் 75:@)
அமைதி அடைந்த ஆன்மா!
ஓ!  அமைதி அடைந்த ஆன்மாவே!  செல், உன் இறைவனின் பக்கம்!  (உன் நல்ல முடிவைக் கொண்டு) மகிழ்ந்த நிலையில்; (மேலும், உன் இறைவனின்) திருப்தியைப் பெற்ற நிலையில்!  இணைந்து விடு, என்னுடைய (நல்) அடியார்களுடன்! மேலும், புகுந்துவிடு, என்னுடைய கவனத்தில்! (திருக்குர் ஆன் 89:27-30)
ஆன்மாவைத் தூய்மைப்படுத்துங்கள்!
(இறைவன்) தீமையையும், தூய்மையையும் ஆன்மாவின் உள்ளுணர்வில் வைத்தான்!  திண்ணமாக, வெற்றிபெற்றுவிட்டான் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தியவன்; மேலும், தோற்றுவிட்டான் அதனை நசுக்கியவன்!  (திருக்குர் ஆன்91:8-10)

Leave a Reply