- செய்திகள், விளையாட்டு

மும்பை-பஞ்சாப் இன்று மோதல்

 

மொஹாலி, ஏப்.25:-

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.இந்தப் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடக்கிறது.

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4-ல் தோல்வி கண்டு இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 5 போட்டிகளில் விளையாடி அந்த அணியும் 4 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. புள்ளிப் பட்டியலில் இரு அணிகளுமே நான்கு இடத்துக்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை அணியில் கர்னால் பாண்ட்யா, கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

பஞ்சாப் அணியைப் பொருத்தவரை எந்த வீரரும் நிலைத்து ஆடவில்லை. மனன் வோரா மட்டும் ஓரளவுக்கு நன்றாக ஆடுகிறார்.

இரு அணிகளுமே வெற்றிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பது திண்ணம்.

Leave a Reply