- செய்திகள், விளையாட்டு

மும்பை-பஞ்சாப் இன்று மோதல்

 

விசாகப்பட்டினம், மே 13:-
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 4-வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் கடைசி இடத்தில் உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன.

விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு நடக்கிறது.

முன்னதாக, ஹைதராபாத் அணியால் தோற்கடிக்கப்பட்ட மும்பை அணி நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்திய தெம்பில் உள்ளது. 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ஆக இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மும்பை அணி கடுமையாக போராடும்.

மும்பை அணியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் ரோஹித் சர்மா முதல் இடத்தில் உள்ளார். அணிக்குத் தேவையான நேரங்களில் பந்து வீச்சையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது மும்பை அணி வீரர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மையே உண்டாக்கியுள்ளது. அதில் இருந்து மீள வேண்டும் என்று அவர்கள் இப்போது உறுதியாக உள்ளனர்.

பஞ்சாப் அணியைப் பொருத்தவரை எப்படியும் நான்கு அணிகளுக்குள் வருவது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் கடைசி இடத்தில் இருந்து தப்பித்து மேல முன்னேறிவிட வேண்டும் என்று துடிப்பில் இருப்பதால் இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும்.

Leave a Reply