- ஆன்மிகம், செய்திகள், மாநிலச்செய்திகள்

முத்து பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா திருச்சானூர் கோவில் பிரமோற்சவம்

திருப்பதி, டிச.11 :-

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 3ம் நாளில் உற்சவர் தாயார் முத்து பந்தல் வாகனத்தில்  வீதி உலா வந்தார்.
பக்தர்களுக்கு காட்சி
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 8-ந் தேதி கோவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் 3ம் நாளான நேற்று காலை முத்து பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் திருமாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதையடுத்து மாலை சிம்ம வாகனத்தில் தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட விதிகளில் பவனி வந்தார்.

சுவாமி தரிசனம்
சுவாமி வீதிஉலாவிற்கு முன்னதாக யானைகள், காளைகள், குதிரைகள் அணிவகுத்து சென்றது. இந்து தர்மப்பிரச்சார பர்ஷத் சார்பில் அன்னமாச்சார்யா, தாச சகித்திய திட்டத்தின் சார்பில் பக்தர்களின் கோலாட்டம் பஜனைகள், தப்பாட்டம் ஆடியபடியும், சன்டை மேளம், வாசித்து ஊர்வலமாக சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அனுமந்த வாகனம்
பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான இன்று காலை கல்ப விருக்‌ஷ வாகனத்திலும் மாலை அனுமந்த வாகனத்திலும், 5ம் நாளான நாளை காலை சர்வ பூபால வாகனத்திலும் மாலை கஜ (யானை ) வாகனத்திலும் 13-ந் தேதி மாலை பிரதான வாகனமாக கருதப்படும் தங்க தேர் மற்றும் கருட வாகனத்தில் தாயார் அருள்பாலிக்க உள்ளார்.
ேதரோட்டம்
14-ந் தேதி காலை சூர்ய பிரப வாகனத்திலும் மாலை சந்திர பிரப வாகனத்திலும், 15-ந் தேதி காலை தேரோட்டமும், மாலை குதிரை வாகனத்திலும் உற்சவ தாயார் காட்சி கொடுக்க உள்ளார். பிரமோற்சவத்தின் நிறைவு நாளான 16-ந் தேதி காலை கோவில் தெப்ப குளத்தில் புண்ணிய நீராடல் நடக்கிறது. அன்று மாலை கொடியிறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவடைகிறது.

படவிளக்கம்:
திருச்சானூர் வருடாந்திர பிரமோற்சவத்தின் 3ம் நாளான நேற்று மூலவர் முத்து பந்தல் வாகனத்தில் வீதி உலா வந்தார்.

Leave a Reply