- செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா திருவள்ளூர் அருகே…

திருவள்ளூர், ஆக. 17-
திருவள்ளூர் அடுத்த ஒதப்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி நாள் தீமிதி திருவிழா நடத்தப்பட்டது. இதற்காக பாம்பை உடுக்கை வர்ணனையுடன் அம்மனுக்கு காப்புக் கட்டப்பட்டது. இரவு வேப்பிலை, கரகம் வீதி உலா நடத்தப்பட்டது. மறுநாள் ஏராளமான பெண்கள் பால்குடம் ஏந்தி அம்மனுக்கு அபிஷேகம் செய்வித்தார்கள்.
மூன்றாவது நாளில் காலையில் கூழ்வார்த்தல், பொங்கல் படையல் இடுதல் ஆகியவைகள் நடைபெற்றன. மாலையில் முத்து மாரியம்மன் ஆற்றங்கரைக்கு சென்று அம்மனிடம் அனுமதியும் அருளும் பெற்று காப்புக் கட்டியவர்கள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் அன்னையை வலம் வந்து தீக்குண்டம் இறங்கி அம்மனை வழிபாடு செய்தனர். இரவு திருவீதி உலாவும், தெருக்கூத்தும் நடைபெற்றது.

படம் உள்ளது.

Leave a Reply