- செய்திகள்

முதியோர் உதவித்தொகை விஜயகாந்த் அறிக்கை…

சென்னை, ஆக. 18-

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் பலர் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் உண்மையில் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு இந்த திட்டம் சென்றடையாமல், ஆளும் தரப்பினருக்கும், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்குமாக மாறும் திட்டமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
ஏற்கனவே பற்றாக்குறை பட்ஜெட்டை அரசு சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசுக்கு பற்றாக்குறையான கடன் தொகை 2.50 லட்சம் கோடி ரூபாய் வரி பற்றாக்குறை, 10,000 கோடி ரூபாய் இலவச திட்டத்துக்கு தேவையான தொகையுடன் சேர்த்து சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் பற்றாகுறையை சரிகட்ட முடியாத நிலை உள்ளது. வெறும் ரூ.92 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை வைத்துக்கொண்டு முதியோருக்கு உதவித்தொகை வழங்குவதை சரிவர தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அரசின் வருமானத்தை உயர்த்தி உண்மையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் முதியவர்களைக் காப்பாற்ற, இந்த அரசு முதியோர் உதவித்தொகை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு விஜயகாந்த் கூறி உள்ளார்.

Leave a Reply