- செய்திகள், மாநிலச்செய்திகள்

முதல் கட்ட விற்பனையைக்காட்டிலும்

புதுடெல்லி, பிப்.1:-

மத்திய  அரசின் 2-ம் கட்ட தங்கப்பத்திரம் விற்பனை திட்டத்தில்  ரூ. 798 கோடியை  மக்கள் முதலீடு செய்துள்ளனர். முதல்கட்ட விற்பனையைக் காட்டிலும் 200 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தங்கம் இறக்குமதியை குறைப்பதற்காக,  தங்கம் மதிப்பில் உள்ள பத்திரத்தை வாங்கும்  திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்தது.  தங்கப்பத்திரத்துக்கு ஆண்டுக்கு 2.75 சதவீத வட்டியும், 8  ஆண்டு முதிர்வு காலத்துக்குபின், பத்திரத்தை கொடுத்து, அன்றைய விலை  நிலவரப்படி, தங்கமாகவோ, பணமாகவோ பெறலாம். குறைந்த பட்சமாக, 2 கிராம்,  அதிகபட்சமாக, 500 கிராமுக்கு பத்திரம் வாங்கலாம்.

இந்நிலையில்  முதல்கட்ட தங்கப்பத்திரத் திட்டத்தில் ரூ. 246 கோடி மட்டுமே மக்கள்  முதலீடு செய்து இருந்தனர். இது 915.95 கிலோ தங்கத்துக்கு சமமாகும்.  62  ஆயிரத்து 169 விண்ணப்பங்கள் மட்டுமே வந்து இருந்தன.

2-ம் கட்டம்

இதற்கிடையே 2-ம் கட்ட தங்கப்பத்திர விற்பனை கடந்த மாதம் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடந்தது. இந்த 2-ம் கட்ட விற்பனையில், மக்களிடமிருந்து இதுவரை 3.3லட்சம் விண்ணப்பங்கள்   பெறப்பட்டுள்ளன. இதுவரை ரூ. 798 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. இது 3  ஆயிரத்து 71 எடை கொண்ட தங்கத்துக்கு சமமாகும். தங்கப்பத்திரங்கள் பிப்ரவரி  8-ந் தேதி ஒதுக்கீடு செய்யப்படும்.  இந்த விற்பனை முதல்கட்ட தங்கப்பத்திர விற்பனையைக்  காட்டிலும் 200 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply