- சென்னை, செய்திகள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துசென்னை, ஆக. 11-பகவத் கீதை போதனைகளை பின்பற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். கிருஷ்ண ஜெயந்தி நாளன்று, மக்கள் தங்கள் இல்லங்களில் மாவில் நனைத்து, இல்லம் நெடுக பதித்து, குழந்தை ஸ்ரீகிருஷ்ணனே தங்கள் இல்லத்திற்கு வந்ததாக பாவித்து மகிழ்ச்சியுடன் இறைவனை வழிபடுவார்கள்.கீதையின் போதனைகள்ஒப்பற்ற ஞான நூலான பகவத் கீதையை உலகிற்கு அருளிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில், பகவத் கீதையின் போதனைகளான அனைவரிடத்திலும் அன்பு செலுத்துதல், பலன் கருதாது கடமையை செய்தல், பற்றற்று இருத்தல், எளிமையாக அடக்கத்துடன் வாழ்தல் போன்றவற்றை மக்கள் அனைவரும் வாழ்வில் பின்பற்றி, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply