- செய்திகள், மாவட்டச்செய்திகள், வணிகம்

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி சரிவு

 

மின்சாரம், சிமெண்ட், நிலக்கரி, பெட்ரோலிய கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள், உரம், உருக்கு ஆகியவை முக்கிய 8 துறைகளாகும். இந்த 8 முக்கிய துறைகளின் உற்பத்தி கடந்த நவம்பர் மாதத்தில் 1.3 சதவீதம் குறைந்துள்ளது. மின்சார உற்பத்தி குறைந்தது. சிமெண்ட், உருக்கு உற்பத்தி சரிந்ததே இதற்கு முக்கிய காரணம். நம் நாட்டின் தொழிற் துறை உற்பத்தியை கணக்கிடுவதில் முக்கிய 8 துறைகளின் பங்கு 38 சதவீதமாக உள்ளது. நவம்பரில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி குறைந்துள்ளதால் அந்த மாதத்தில் தொழிற் துறை உற்பத்தி வளர்ச்சியும் சரிந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.32 லட்சம் கோடி
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் இந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) 1.7 சதவீதம் அதிகரித்து ரூ.32 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் நீண்ட கால கடன் ரூ.26.20 லட்சம் ேகாடியாகவும், குறுகிய கால கடன் ரூ.5.80 லட்சம் கோடியாகவும் உள்ளன. தனியார், அரசு நிறுவனங்கள், அரசுகள் வெளிநாடுகளில் வாங்கும் கடன்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட் போன்றவை வெளிநாட்டுக் கடனில் அடங்கும்.

குறுங் கடன் நிதி நிறுவனங்களுக்கு அடிப்படை கடன் வட்டி நிர்ணயம்
கடந்த ஆண்டில் கடனுக்கான வட்டியை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ரிசர்வ் வங்கி குறைத்தது. இந்த நிலையில் வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனங்கள், குறுங் கடன் நிதி நிறுவனங்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 9.45 சதவீதமாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, அந்த நிதி நிறுவனங்கள் இந்த வட்டி விகிதத்துக்கு குறைவாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க முடியாது.

10 லட்சம் வேலை வாய்ப்புகள் காத்திருக்கு
ஆன்லைன் ஆள்சேர்ப்பு தளமான மைஹையரிங்கிளப் டாட் காம் நிறுவனம்  21 முக்கிய நகரங்களில் 12 துறைகளை சேர்ந்த மொத்தம் 5,480 நிறுவனங்களிடம் 2016-ம் ஆண்டில் பணி நியமனம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்த ஆண்டில் நிறுவனங்கள் 10 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களை கூடுதலாக சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறமையான நபர்களுக்கு சம்பள உயர்வு 10-30 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என தெரிகிறது.

Leave a Reply