- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

‘மீள்கிறார்’ ரபேல் நடால் அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ்

பியுனோஸ் அயர்ஸ், பிப். 14:-

அர்ஜென்டினாவில் நடந்துவரும் அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரரும், நடப்பு சாம்பியனான ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.

பியுனோஸ் அயர்ஸ் நகரில் களிமண் ஆடுகளத்தில் அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரபேல் நடாலை எதிர்த்து மோதினால் இத்தாலி வீரர் பாலோ லாரன்ஸ்.

களிமண் ஆடுகளத்தில் மன்னரான நடாலுக்கு இந்த போட்டி சவாலாக அமைந்தது. 100 டிகிரி பாரன்ஹீட் மேல் கொளுத்திய வெயிலில் பாலா லாரன்சும், நடாலும் கடும் மோதல் நிகழ்த்தினர். பரப்பரப்பாக நடந்த ஆட்டத்தில் லாரன்சை 7-6(7-3), 6-2 என்ற செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு நடால் முன்னேறினார். களிமண் ஆடுகளத்தில் நடால் பெறும் 348-வது வெற்றி இதுவாகும்.

கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியன் ஒபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் பெர்னான்டோ வெர்டாஸ்கோவிடம் முதல் சுற்றில் நடால் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அடைந்த பெருந்தோல்வியில் இருந்து மீள்வதற்கும், அடுத்து வரவுள்ல பிரெஞ்சு ஓபனில் சிறப்பாக செயல்படவும் நடால் இத்தொடரை பயன்படுத்தி வருகிறார். அரையிறுதியில் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தீமை எதிர்கொள்கிறார் நடால்.

Leave a Reply