- செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா திருத்தணியில்…

திருத்தணி, ஆக. 17-
திருத்தணியில் அமைந்துள்ள ஸ்ரீ தணிகை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஜாத்திரை விழாவில், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
மீனாட்சி அம்மன் கோவில்
திருத்தணி புறா கோவில் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ தணிகை மீனாட்சி அம்மன் கோவில். இக்கோவிலில் ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு, காலை 8 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, படையிலிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
வானவேடிக்கை
மாலை 5 மணிக்கு, திருத்தணி ஏரிக்கரையில் இருந்து, அம்மன் திருமுக கரகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பைபாஸ் சாலை, காந்தி சாலை, நல்ல தண்ணீர் குளம், ரெட்டிக்குளம், பழை பஜார் தெரு, பெரிய தெரு, ஆறுமுக சுவாமி கோயில் தெரு ஆகிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8 மணிக்கு பெரிய தெருவில் வானவேடிக்கை நடைபெற்றது. இரவு 10 மணிக்கு பெண்கள் கும்பம் கொட்டும் நிகழ்ச்சி, நாடகம், இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.
பல கோவில்களிலும்
அதேபோல் திருத்தணி நகராட்சியில், மேட்டுத்தெரு, சுப்பிரமணிய நகர், நேருநகர், அக்கைய்ய நாயுடு சாலை மடம் கிராமபகுதியில் உள்ள அம்மன் கோவில்களிலும் ஜாத்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தணிகை மீனாட்சி அம்மன் திருக்கோயில் நடைபெற்ற ஜாத்திரை திருவிழாவில் ஆலய நிர்வாகிகள் கே.சுதாகர், வி.வினோத்குமார், ஆர்.அருணகிரி, பி.வினாயகம், கே.செல்வராஜ், பி.சரவணன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

படம் உள்ளது.

Leave a Reply