- செய்திகள்

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டு ஜி.கே.வாசன் அறிக்கை…

சென்னை, ஜூலை. 28-
மீனவர் பிரச்சினைக்கு சுமூக, நிரந்தர தீர்வு காண, ஒரு நல்ல சூழலை மத்திய அரசு ஏற்படுத்திட வேண்டும் என்று, ஜி.கே.வாசன் கூறினார்.
இது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக மீனவர்கள் கைது
தமிழக மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை இலங்கை கடற்படை அச்சுறுத்துவதும், தாக்குவதும், சிறைப்பிடித்துச் செல்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 46 நாட்களில் 77 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்திருந்தது.
விடுவிப்பு
கடந்த 25-ந் தேதி 49 மீனவர்களையும், 26-ந் தேதி 24 மீனவர்களையும் இலங்கை அரசு விடுவித்தது.
மேலும் மீதமுள்ள 4 மீனவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்வதற்கும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.
102 படகுகள்
மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர இலங்கை வசம் உள்ள 102 மீன்பிடி படகுகளையும் உடனடியாக ஒப்படைக்க இலங்கையை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்.
சுமூக தீர்வுக்கு
இந்த மாத இறுதியில் டெல்லியில் மத்திய அரசு, மீனவப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக தெரிகிறது. அந்த பேச்சு வார்த்தையின் மூலம் தமிழக மீனவர்களுக்கு நியாயம் கிடைத்திட மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு சுமூக, நிரந்தர தீர்வு காண, ஒரு நல்ல சூழலை மத்திய அரசு ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.

Leave a Reply