- செய்திகள், வணிகம்

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த சீன ஏற்றுமதி

 

கடந்த மார்ச்சில்

உலக அளவில் பொருளாதார பலத்தில் 2-வது பெரிய நாடாக சீனா உள்ளது. அந்நாட்டின் ஏற்றுமதி கடந்த 9 மாதங்களில் முதல் முறையாக மார்ச் மாதத்தில் ஏற்றம் கண்டது. இது குறித்து அந்நாட்டு அரசு கூறியதாவது:-

கடந்த மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 11.5 சதவீதம் அதிகரித்து 16,080 கோடி டாலராக உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் தேவை குறைவாக இருந்ததால் முந்தைய 8 மாதங்களில் ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்பட்டது. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 25 சதவீதத்துக்கும் மேல் வீழ்ச்சி கண்டது.

அதே வேளையில் இறக்குமதி தொடர்ந்து 17-வது மாதமாக கடந்த மார்ச்சிலும் குறைந்துள்ளது. அந்த மாதத்தில் இறக்குமதி சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 7.6 சதவீதம் குறைந்து 13,100 கோடி டாலராக உள்ளது.

இவ்வாறு சீன அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply