- சினிமா, செய்திகள்

மீண்டும் நாயகன்

 

படத்தயாரிப்பாளராகி விட்ட பிரபுதேவா, அப்படியே தனது தயாரிப்பில் நாயகனாகவும் நடிக்கிறார். இந்தப் படத்தை டைரக்டர் விஜய் இயக்குகிறார். நாயகி தேர்வு நடந்து வருகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபுதேவாவே ஒரு தமிழ்ப் படத்தை இயக்குகிறார். அதற்கான கதையையும் தயார் செய்து விட்டார். இந்தியில் முன்னணி இயக்குனர் அந்தஸ்தை தனது அடுத்தடுத்த படங்கள் மூலம் அடைந்து விட்ட பிரபுதேவாவுக்கு தமிழிலும் இநத முன்னணி இயக்குனர் நாற்காலி மீது ஆசை. அதற்காக விஜய் நடிப்பில் வில்லு, விஷால் நடிப்பில் வெடி படங்களை இயக்கினார். இரண்டுமே பெரிய அளவில் பேசப்படாமல் போக, அப்படியே ஜம்ப் ஆகி இந்திக்குப் போனார். அங்கே வெற்றி பெற்ற கையோடு தயாரிப்பாளராக தமிழில் களம் இறங்கியிருக்கிறார்.

Leave a Reply