- சினிமா, செய்திகள்

மீண்டும் கருணாஸ்

 

காமெடி கேரக்டரில் பிசியாக  நடித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே சொந்தமாக படம் தயாரித்து அதில் நாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார் கருணாஸ். இந்த படங்கள் தரமான தயாரிப்பாளர் என்ற முறையில் கருணாசுக்கு கவுரவம் சேர்த்தாலும் லாபகரமாக அமையவில்லை. இதனால் மறுபடியும் `டார்லிங்' படத்தில் இருந்து தன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கினார். அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற, தொடர்ந்து கருணாசைத் தேடி நிறைய காமெடி கேரக்டர்கள். சமீபத்தில் வந்த `அழகு குட்டி செல்லம்' படத்தில் கருணாசின் குணசித்ர கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது..
தற்போது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில்  `பேஸ்புக் மோகன்' என்ற வித்தியாசமான காமெடி கேரக்டரில் நடிக்கும் கருணாஸ், வரவிருக்கும் `புகழ்' படத்தில் நடிகர் ஜெய்யின் அண்ணனாக வருகிறார்.` டார்லிங்' வெற்றிப் படத்தை இயக்கிய சாம்ஆண்டர்சன் அடுத்து இயக்கும் `எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படததில் நாயகன் ஜீ.வி.பிரகாஷின் நண்பராக வருகிறார். ஆக, கருணாஸ் இப்ப ரொம்ப பிசி.

Leave a Reply