- செய்திகள்

மின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…

சென்னை, ஆக.29-

சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட்டும் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு 2-வது யூனிட் முதல் அலகில் கொதிகலன் குழாய் பாதிப்பால் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆண்டு பராமரிப்புப் பணிக்காக 2-வது யூனிட் 2-வது அலகிலும் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் 2-வது யூனிட் முழுவதுமாக 1,200 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply