- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

மின்மிகை மாநிலமானது தமிழகம்

சென்னை, பிப்.17-
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
2011 ஆம் ஆண்டு மே மாதம், இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற போது, நிலவி வந்த கடும் மின்வெட்டு, பொதுமக்களையும் தொழில் துறையையும் எண்ணிலடங்கா இன்னல்களுக்கு ஆளாக்கியது.  இப்பிரச்சினையைத் தீர்த்து, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் ெஜயலலிதா ஒரு உன்னதமான    இலக்கை நிர்ணயித்தார்.  இந்த இலக்கு அடையப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தியதன் மூலமாக 4,455.50 மெகாவாட் உற்பத்தித் திறனும், நடுத்தர கால மற்றும் நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலமாக 3,030 மெகாவாட் உற்பத்தித் திறனும்   கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, 31.12.2015 அன்றைய நிலவரப்படி, மாநிலத்தின் மின் உற்பத்தித்திறன் 26,806.50 மெகாவாட் அளவை எட்டியது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அயராத முயற்சிகளும், அவரின் கடும் உழைப்பும், எதிர்காலத்திலும் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் தொடர்ந்து விளங்குவதை உறுதி செய்யும்.
இலவச மின்சார மானியம்
2010-2011 ஆம் ஆண்டில் ரூ.287.12 கோடியாக இருந்த விவசாயத்திற்கான இலவச மின்சார மானியம், 2015-2016 ஆம் ஆண்டில் ரூ.3,319.30 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மின்சார மானியமாக ரூ.7,370.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து
மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும் சேவைத் தடங்களின் எண்ணிக்கை, 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, 20,739 ஆக உயர்ந்துள்ளது.  இதனால், சராசரியாக நாளொன்றுக்கு 93.85 இலட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  சென்னை மாநகரப் பகுதிகளில் இயக்கப்படும் சிறு பேருந்துகளை உள்ளிட்டு, கடந்த 5 ஆண்டுகளில், 1,510 புதிய வழித்தடங்களில் பேருந்துகள்
இயக்கப்படுகின்றன.
-==

Leave a Reply