- செய்திகள், விளையாட்டு

‘மின்னொளி’; ‘பிங்க் பந்து’, ; ‘வெள்ளை ஆடை’ இந்தியாவிலும் வந்திருச்சு ‘பகலிரவு ெடஸ்ட் ’ போட்டி

வெலிங்டன், ஏப். 27:-

இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வரும் நியூசிலாந்து அணியுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவது குறித்து பி.சி.சி.ஐ. அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் துபாயில் நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் வொயிட்டை சந்தித்த பி.சி.சி.ஐ. அதிகாரிகள் இது தொடர்பாக பேச்சு நடத்தி இருக்கின்றனர்.

அது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சி.இ.ஓ. டேவிட் வொயிட் கூறுகையில், “ இந்திய கிரிக்கெட் வாரியம் கூறிய ஆலோசனைக்கு மதிப்பளிக்கிறோம். இது தொடர்பாக இரு நாட்டு வீரர்களிடம் பேச உள்ளோம். பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நடக்கும் பயிற்சிகள், இரு நாட்டு வீரர்களுக்கும் சாதகமாக இருக்கும் பட்சத்தில், சாத்தியமே'' என்று தெரிவித்தார்.

நியூசிலாந்து அணியுடன் பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்தப்படும் பட்சத்தில் அது மும்பையில் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. அதற்கு முன்பாக உள்நாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்களுக்கு பகலிரவு டெஸ்ட் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

பாக்ஸ் மேட்டர்……

துலிப் டிராபியில் ஒத்திகை

பி.சி.சி.ஐ. அமைப்பின் செயலாளர் அனுராக் தாக்கூர் கூறுகையில்,
“ இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வரும் நியூசிலாந்து அணியுடன் பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்த முடிவு செய்துள்ளோம். அதற்கு முன்பாக, துலீப் டிராபி போட்டியில் பகலிரவு டெஸ்ட் தொடர்பாக வீரர்களுக்கு வெள்ளை உடை, பிங்க் பந்து வழங்கி பயிற்சி அளிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

Leave a Reply