- அரசியல் செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளது தேர்தல் தேதி விரைவில் இறுதி செய்யப்படும் சத்திய பிரதாசாகு தகவல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை இறுதி செய்யும் வகையில் மாநில- உள்ளூர் விடுமுறை தேதிகள் விவரம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை இறுதி செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு 2 லட்சம் பேர் வரை வாக்காளர் பட்டியலில் இணைவதற்காக ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதாகவும், இது போன்ற பல்வேறு விதமான பணிகளை தொடர்ந்து தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். மேலும் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடத்துவதற்கு எதுவாக தேதியை இறுதி செய்வதற்கு மாநில மற்றும் உள்ளூர் விடுமுறை தேதிகள் மாவட்ட கலெக்டர்களிடம் பெறப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தாம் அனுப்பி வைத்துள்ளதாகவும், அது தொடர்பாக இறுதி முடிவினை இந்திய தேர்தல் ஆணையமே மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளதாகவும் வாக்குசாவடிகளின் எண்ணிக்கை 67ஆயிரத்திலிருந்து 93ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இதனிடையே தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் ஆணைய உயர் அதிகாரிகள் சென்னை வந்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். பின்னர் தேர்தல் தேதி விரைவில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply