- காஞ்சிபுரம், செய்திகள், மாவட்டச்செய்திகள்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம்

காஞ்சிபுரம்,மார்ச்.8-
வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைத்து  கட்சி கூட்டத்தில், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பற்றி, மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான இரா.கஜலட்சுமி தெரிவித்தார்.
அனைத்து  கட்சி கூட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி அனைத்து  கட்சி கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான இரா.கஜலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய்  அதிகாரி க.சவுரிராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட உயர் அதிகாரி க.முத்துமீனாள், காஞ்சிபுரம் சப்-கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜா.முத்தரசி, உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் என்.சி.கிருஷ்ணன், ஆர்.வி.ரஞ்சித்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வீ.வள்ளிநாயகம், தும்பவனம் டி.ஜீவானந்தம், (அ.தி.மு.க) .  சன்பிராண்ட் கே.ஆறுமுகம், (தி.மு.க.) .எழிலரசன், வக்கீல் கார்த்திகேயன்,(சி.வி.எம்.) ஆர்.வி.குப்பன்,(காங்கிரஸ்) .  இ.வளையாபதி, (ம.தி.மு.க)  ஆறுமுகம், (கம்யூனிஸ்டு)உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நடத்தை விதிமுறைகள்
கிழக்கு கடற்கரை சாலைகளில், தேர்தல் விதிமுறைகளை பின்பற்றவில்லை. சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படவில்லை என  தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர். உடனே ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை உடனடியாக பின்பற்றுமாறு உத்தரவிட்டார்.

Leave a Reply