- செய்திகள், வணிகம்

மார்ச்சிலும் வீழ்ந்தது ஏற்றுமதி தொடர்ந்து 16-வது மாதமாக

புதுடெல்லி, ஏப்.20:-
நம் நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து 16-வது மாதமாக கடந்த மார்ச் மாதத்திலும் வீழ்ச்சி கண்டுள்ளது.

பெட்ரோலிய பொருட்கள்

கடந்த மார்ச் மாதத்தில் 2,271 கோடி டாலருக்கு சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 5.47 சதவீதம் குறைவாகும். பெட்ரோலிய பொருட்கள், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி குறைந்ததே இதற்கு முக்கிய காரணம்.
சரக்குகள் இறக்குமதி சென்ற மார்ச் மாதத்தில் 21.56 சதவீதம் குறைந்து 2,778 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. குறிப்பாக தங்கம் இறக்குமதி 80.48 சதவீதம் குறைந்து 97.29 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. எண்ணெய் இறக்குமதி 35.3 சதவீதம் குறைந்து 479 கோடி டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது.

வர்த்தக பற்றாக்குறை

சரக்குகள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான வித்தியாசம் வர்த்தக பற்றாக்குறை ஆகும். கடந்த மார்ச் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 507 கோடி டாலராக குறைந்துள்ளது. 2015 மார்ச் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 1,139 கோடி டாலராக இருந்தது.

கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் சரக்குகள் ஏற்றுமதி 15.28 சதவீதம் குறைந்து 26,113 கோடி டாலராகவும், இறக்குமதி 15.28 சதவீதம் வீழ்ந்து 37,960 கோடி டாலராகவும் உள்ளது. இதனையடுத்து சென்ற நிதி ஆண்டில் வர்த்தக பற்றாக்குறை 11,845 கோடி டாலராக உள்ளது.

பாக்ஸ்…

அருண் ெஜட்லி கவலை

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இது குறித்து கூறுகையில், `ஏற்றுமதி தொடர்ந்து 1 ஆண்டுக்கு மேல் சரிவு கண்டு வருவது பெரிதும் கவலை அளிப்பதாக உள்ளது.  உலக நாடுகளில் தேவை குறைந்ததால் ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

Leave a Reply