- செய்திகள், வணிகம்

மாருதி சுஸூகி லாபம் ரூ.1,133 கோடி

 

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி இந்தியா சென்ற 2015-16-ம் நிதி ஆண்டின் 4-வது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) நிகர லாபமாக ரூ.1,133.6 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய 2014-15-ம் நிதி ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 11.7 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,284.2 கோடியாக இருந்தது. அரியானா மாநிலத்தில் ஜாட் இனத்தினரின் போராட்டம், விளம்பர செலவினம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது. கடந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர வருவாய் ரூ.14,929.50 கோடியாக உயர்ந்துள்ளது.

Leave a Reply