- செய்திகள், வணிகம்

மாருதி கார்கள் விலை ரூ.20 ஆயிரம் வரை உயருகிறது

 

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி கூறியதாவது:-
2016 ஜனவரி முதல் எங்களது அனைத்து மாடல் கார்களின் விலையும் ரூ.20 ஆயிரம் வரை உயருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, நிர்வாக செலவினம் அதிகரிப்பு மற்றும் இதர செலவினங்கள் உயர்வால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
கார் தயாரிப்பு நிறுவனங்கள் வாகன உதிரிபாகங்களை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் அவற்றின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும்.
அடுத்த மாதம் முதல் தனது அனைத்து மாடல் கார்களின் விலை ரூ.30 ஆயிரம் வரை உயரும் என ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply