- செய்திகள், தஞ்சாவூர், திருச்சி

மாநில கராத்தே போட்டி 450 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு

தஞ்சை,மார்ச்.1-
தஞ்சையில் மாநில அளவிலான கராத்தே போட்டியில் 450 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கராத்தே போட்டி
தஞ்சையில் டிராகன் சிட்டோ– ரியூ கராத்தே பள்ளி சார்பில் 15-–ம் ஆண்டு மாநில அளவிலான கராத்தே போட்டி தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு செந்தில்குமார் தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி வரவேற்றார். வக்கீல் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
போட்டியை முன்னாள் அமைச்சர் உபயதுல்லா தொடங்கி வைத்தார். போட்டிகள் 45 பிரிவுகளில் நடைபெற்றது. இதில் 6 முதல் 16 வயது வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், 30 வயது வரை பொதுப்பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
450 பேர் பங்கேற்பு
இந்த போட்டியில் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கராத்தே வீரர், வீராங்கனைகள் என 450 பேர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சுழற்கேடயங்கள் வழங்கப்பட்டன.
முடிவில் தஞ்சை மாவட்ட டிராகன் சிட்டோ ரியூ கராத்தே சங்க செயலாளர் முனுசாமி நன்றி கூறினார்.

Leave a Reply