- செய்திகள்

மாணவ, மாணவியர்கள் மரக்கன்றுகள் நட்டனர் அப்துல் கலாம் நினைவுதினத்தையொட்டி…

திருப்போரூர், ஜூலை.29-
திருப்போரூரை அடுத்த பையனூரில் உள்ள அறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாட்டுநலப்பணித் திட்டத்தின் சார்பில் கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் முனைவர் சுயம்பழகன் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
அதேபோல் கேளம்பாக்கத்தில் அப்துல் கலாம் நினைவுநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 500 பேர் கலந்து கொண்ட அமைதி பேரணி நடைபெற்றது. கேளம்பாக்கம் ஊராட்சிமன்ற அலுவலகத்திலிருந்து அதன் தலைவர் வெங்கடேசன் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் அப்துல்கலாம் மாணவர்கள், இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக கூறிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இதேபோல் திருப்போரூர், படூர், நாவலூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

படம் உள்ளது.

Leave a Reply