- செய்திகள், திருச்சி

மாணவி பலாத்காரம் ஊர் தலைவர் கைது…

 

திருச்சி, ஜூன் 25-
திருச்சி அருகே மாணவியை பலாத்காரம் செய்த ஊர் தலைவர் கைது செய்யப்பட்டார்.
ஊர் தலைவர்
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் வைரம் (வயது 50). ஊர் தலைவரான இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயதான பாலிடெக்னிக் கல்லூரி மாணவியை மயக்க மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்தார். மேலும் இது பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி அந்த மாணவியுடன் தொடர்ந்து உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார்.
இச்சம்பவம் தொடர்பாக வைரத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆலத்தூர் கிராம மக்கள் கடந்த 12-ந் தேதி திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
வழக்குப்பதிவு
அதன்பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் வைரம் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, திருவெறும்பூர் இன்ஸ் பெக்டர் மதன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான போலீசார் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் ரோந்து சென்ற போது அந்த வழியாக மொட்டை அடித்துக் கொண்டு நடந்து சென்றவரை சந்தேகப்பட்டு பிடித்து விசாரணை செய்தனர்.
ைகது
விசாரணையில் அவர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து கொண்டிருந்த வைரம் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply