- செய்திகள், மாவட்டச்செய்திகள், விழுப்புரம்

மாணவி பரிதாப சாவு மின்வேலியில் சிக்கி…

திருக்கோவிலூர்,ஏப்,11-
வாணபுரம்  பொற்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த சம்பத்குமாரின் மகள் சர்மிளா,(வயது 17). 12-ம் வகுப்பு படித்து வந்த இவர்,  ராமகிருஷ்ணன் என்பவரது விவசாய நிலத்தின் வழியாக சென்றார். அந்த நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த பழனிமுத்து மகன் சங்கர்,(36), குத்தகைக்கு எடுத்திருந்தார். இங்கு, காட்டு விலங்குகளிடமிருந்து பயிரை பாதுகாக்க, நிலத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்தார். இதனையறியாமல், அங்கு சென்ற சர்மிளா, மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். இது குறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து  சங்கரை கைது செய்தனர்.

Leave a Reply