- செய்திகள், விளையாட்டு

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நிலவும் ‘ தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க போட்டிகளை மாற்றுவது தீர்வாகுமா? ’

மும்பை, ஏப். 11:-

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை அங்கிருந்து மாற்றினால் சிக்கல் தீர்ந்துவிடுமா என கேள்வி எழுப்பிய இந்திய அணியின் கேப்டன் தோனி, தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க நீண்ட காலத் திட்டம் தேவை என்று அவர் தெரிவித்தார்.

மும்பையில், ‘லாவா ’ செல்போன் நிறுவனத்தின் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் லாவா செல்போனின் தூதுவராக மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டார். அதன் பின் நடந்த நிருபர்கள் சந்திப்பில் தோனி பேசினார்.

அப்போது அவரிடம் மஹாராஷ்டிராவில் தண்ணீர் பஞ்சம் இருப்பதால், ஐ.பி.எல். போட்டிகளை நடத்தக்கூடாது, வேறு மாநிலங்களில் நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில்அளித்த தோனி, கூறுகையில், “ இந்த கேள்வியைக் கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால், தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க ஐ.பி.எல். போட்டிகளை மாற்றினால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா. இது தொடர்ந்து, அடிக்கடி வரக்கூடிய சிக்கல். இதற்கு நீண்டகண்ணோட்டத்தில் மட்டுமே தீர்வு காண முடியும்  தண்ணீர்  பற்றாக்குறை நிலவும் இடங்களில் எப்படி கொண்டு போய் நீரை சேர்க்கிறோம் என்பது முக்கியம்.

நான் டி.வியில் பல அணைகளை பார்த்து இருக்கிறேன். அந்த அணைகளில் ஒன்று முதல் இரண்டு சதவீதம் தண்ணீர் மட்டுமே இருக்கிறது. ஆதலால், தண்ணீரை சேமிக்க நீண்ட காலத்தீர்வு அவசியம்.

புனே, நாக்பூரில் போட்டி நடக்குமா என்று மக்கள் நினைக்கிறார்கள. என்னைப் பொருத்தவரை போட்டிகள் சிறிதுநேரத்தில் நடந்து முடியக்கூடியவை. ஆனால், நம் நாட்டுக்கு இப்போது தேவை, நீண்ட காலத்தில் தண்ணீர் பிரச்சினை வராமல் பார்த்துக்கொண்டு, அதனை நோக்கி நாம் நகர வேண்டும் என்பது தான் '' என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply