- செய்திகள்

மழை இல்லாததால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை இல்லாததால், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று அதிகாலை திடீரென பலத்த மழை கொட்டியது. பின்னர் இது இரவு வரை கனமழையாக நீடித்தது. இடைவிடாமல் பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தில் மிதந்தது.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

ஏற்கனவே கடந்த மாதம் நிவர் புயல் காரணமாக பெய்த கன மழையால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்றும் கனமழை கொட்டியதால் இந்த 2 ஏரிகளுக்கும் நீர்வரத்து மேலும் அதிகரிக்க தொடங்கியது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 6,200 கன அடி வரை தண்ணீர் வந்தது.

இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து நேற்றுமுன்தினம் மதியம் உபரிநீர் திறக்கப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆரம்பத்தில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் இது 3,200 கன அடி வரை உயர்த்தப்பட்டது.

நேற்று காலை மழை இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து 1530 கன அடியாக குறைந்தது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது 1,676 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கன அடி. தற்போது 3426 மி.கன அடி தண்ணீர் உள்ளது. மொத்தம் உள்ள 24 அடியில் 23.18 அடிக்கு நீர் நிரம்பி காணப்படுகிறது.

ஏரியின் நீர்மட்டம் 23 அடிக்கு கீழ் குறைந்ததும் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் புழல் ஏரியில் இருந்து ஆரம்பத்தில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் 1500 கன அடி வரை உயர்த்தப்பட்டது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி. கன அடி. ஏரியில் தற்போது 3249 மி.கன அடி தண்ணீர் உள்ளது. 261 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று காலை ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் தண்ணீர் திறப்பு 850 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கன அடி ஏரியில் 881 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

கண்ணன்கோ£ட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 406 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 75 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண் ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப் படுவது வழக்கம்.

அதன்படி கடந்த மாதம் 16-ந்தேதி புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 616 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை முதல் பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகியது. அதே போல் புழல், செம்பரம்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்ததால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகமாகியது.

இதனை கருத்தில் கொண்டு நேற்று இரவு பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக பூண்டி ஏரியிலிருந்து மதகுகள் வழியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. அதாவது தண்ணீர் வெளியேற்றம் வினாடிக்கு 487 கனஅடியிலிருந்து 994 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 34.96 அடியாக பதிவாகியது. 3135 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 994 அடியாக இருந்தது. பூண்டி ஏரியி லிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 9 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

Leave a Reply