- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

மலிங்காவுக்கு பதில் மாத்யூஸ் கேப்டன்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து லஷித் மலிங்கா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ஆஞ்ஜெலோ மாத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து டெஸ்ட், 20 ஓவர், ஒரு நாள் போட்டி என மூன்றுக்கும் இனிமேல் மேயூஸ்தான் கேப்டனாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

காயம் காரணமாக கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டாலும் அணியில் அவர் இடம் பெறுவார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியத் துணைத் தலைவர் மோகன் டிசில்வா தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளிடமும் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply