- செய்திகள், விளையாட்டு

மலிங்காவுக்கு பதில் ஜெரோம் டெய்லர்

 

மும்பை, ஏப்.28:-
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இலங்கை வேகப் பந்து வீச்சாளர் லஷித் மலிங்காவுக்கு பதில் மேற்கிந்திந்தியத் தீவுகள் வேகப் பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மும்பை அணி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மும்பை அணியில் இடம் பெற்றிருந்த மலிங்கா காயம் காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாததால் அவருக்கு பதிலாக ஜெரோம் டெய்லர் இடம் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த நடவடிக்கைகள் முடிவுற்ற பின்னர் ஜெரோம் மும்பை அணியில் தனது வேகத்தை காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஜெரோம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் புனே அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலில் ஏற்பட்ட காயமம் காரணமாக மலிங்கா இந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்கு தகுதியில்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்தது முதல் மலிங்கா அந்த அணிக்காக 98 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply