- செய்திகள், வணிகம்

மறைமுக வரி வசூல் 34 சதவீதம் அதிகரிப்பு முதல் 8 மாதங்களில்

புதுடெல்லி, டிச.10:-
இந்த நிதி ஆண்டின் முதல் 8 மாதங்களில் (ஏப்ரல்-நவம்பர்) மறைமுக வரி வசூல் 34 சதவீதம் அதிகரித்து ரூ.4.38 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் மத்திய அரசின் மறைமுக வரி வசூல் ரூ.3.26 லட்சம் கோடியாக இருந்தது. இந்த நிதி ஆண்டில் மறைமுக வரிகள் வாயிலாக ரூ.6.46 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை இந்த இலக்கில் 67.8 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.
மொத்த மறைமுக வரி வசூலில் உற்பத்தி வரி வாயிலாக ரூ.1.70 லட்சம் கோடி திரட்டப்பட்டுள்ளது. சுங்க வரி வாயிலாக ரூ.1.39 லட்சம் கோடியும், சேவை வரி வாயிலாக ரூ.1.27 லட்சம் கோடியும் திரட்டப்பட்டுள்ளது.

Leave a Reply