- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

மருத்துவத் துறையில் 1192 காலியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம்…

சென்னை, பிப்.4-
தமிழ்நாடு மருத்துவத் துறையில் சார் நிலைப்பணியில் காலியாக உள்ள 1192 பணியிடங்களுக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
524 காலி பணியிடங்கள்
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு மருத்துவத் துறையில் இ.இ.ஜி/இ.எம்.ஜி. டெக்னீஷியன் 12, ஆடியோ மெட்ரீசியன் 17, ப்ரொஸ்தடிக் கிராப்ட்ஸ்மேன் 64, ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் 18, மருந்தாளுநர் 333, டார்க் ரூம் உதவியாளர் 234, லேப் டெக்னீசியன் கிரேடு-2 524 என்று பணியிடங்கள் காலியாக உள்ளன.

விண்ணப்பிக்கலாம்
மருந்தாளுநர், டார்க் ரூம் உதவியாளர், லேப் டெக்னீசியன் கிரேடு-2 பணியிடங்களுக்காக விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்தவர்கள், 17-ந் தேதிக்குள்ளும், மற்ற பணிகளுக்கு 10-ந் தேதிக்குள்ளாகவும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.mrb.tn.gov.in ஆன்-லைன் பதிவேற்றம் மூலம் விண்ணப்பிக்கலாம்.   இப்பணியிடங்கள் தொடர்பான விரிவான விபரங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் www.mrb.tn.gov.in வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply