- செய்திகள், வணிகம்

மன்னிப்பு கோரியது மிட்சுபிஷி மோட்டார்ஸ் வெளிவந்தது மோசடி விவகாரம்

டோக்கியோ, ஏப்.22:-
வாகனங்களின் எரிபொருள் திறன் தகவல்களில்  பணியாளர்கள் மோசடி செய்ததை மிட்சுபிஷி நிறுவனம் கண்டுபிடித்தது. இதனையடுத்து அந்த நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

மிட்சுபிஷி பணியாளர்கள் 6.20 லட்சத்துக்கும் மேற்பட்ட இலகு ரக வாகனங்களின் மைலேஜ் சோதனை தகவல்களை வேண்டும் என்றே மோசடியாக 5 முதல் 10 சதவீதம் வரை அதிகம் மதிப்பீடு செய்துள்ளனர். இதனை அந்த நிறுவனம் கண்டு பிடித்தது. இதனையடுத்து மிட்சுபிஷி இதற்கு மன்னிப்பு கோரியது.

இந்த நிலையில், மத்திய ஜப்பானில் நகோயாவில் உள்ள மிட்சுபிஷி நிறுவனத்தின் அசெம்பிளி ஆலையில்  அந்நாட்டின் நிலம், அடிப்படை கட்டமைப்பு, போக்குவரத்து, சுற்றுலா துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வாகனங்களில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக மிட்சுபிஷி மோட்டார்ஸ் பெரிய எண்ணிக்கையில் வாகனங்களை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஜப்பான் பங்குச் சந்தையில் மிட்சுபிஷி பங்குகளின் விலை 20 சதவீதத்துக்கு மேல் சரிந்ததையடுத்து வர்த்தகம் நிறைவடைதற்கு முன்பாகவே இந்த பங்குகள் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

Leave a Reply