- செய்திகள், விளையாட்டு

மன்னிப்பு கோரினார் நிகோலஸ்

 

லண்டன், ஏப்,5:-

மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் அணியின் வீரர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று தெரிவித்துள்ளதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரரும் வர்ணனையாளருமான மார்க் நிகோலஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான மார்க் நிகோலஸ் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவில் குறைந்தவர்கள் என்று ஈஎஸ்பிஎன் இணைய தளத்தில் குறிப்பிட்டுடிருந்தார்

இந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சமி இது குறித்து வேதனை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தான் அது போன்று எழுதியதற்காக வருத்தப்படுவதாவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் நிகோலஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply