- செய்திகள், மாநிலச்செய்திகள்

மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வீடு திரும்பினார் 3 வார கால சிகிச்சைக்குப் பின்

புதுடெல்லி, மே 16:- 3 வாரகால சிகிச்சைக்கு பின்னர் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வீடு திரும்பினார்.

மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (64) நெஞ்சுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 25-ந்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையின் இதய நரம்பியல் பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 3 வார கால சிகிச்சைக்கு பின்னர் சுஷ்மா சுவராஜ் நேற்று வீடு திரும்பினார். வெளிநாட்டு பயணங்களின் போது ஏற்பட்ட வெப்பநிலை மாற்றத்தால்தான் அவரது உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply