- செய்திகள், மாநிலச்செய்திகள்

மத்திய பட்ஜெட் நடுத்தர வகுப்பினருக்கு எதிரானது ராபர்ட் வதேரா கருத்து

புதுடெல்லி, மார்ச்2-

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, மத்திய பட்ஜெட் பற்றி கூறி இருப்பதாவது-

‘‘மத்திய பட்ஜெட் நடுத்தர வகுப்பினருக்கு எதிரானது. பொருளாதார மந்த நிலை உள்ள நிலையில், கூடுதலாக மேலும் ஒரு வரி (செஸ்) விதிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு பெயர்களில் வசூலிக்கப்படும் இதுபோன்ற வரிப்பணம் எப்படி செலவிடப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

இந்த பட்ஜெட் நடுத்தர வகுப்பினருக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். பி.எப். பணத்தை எடுப்பதற்கு வரி விதிக்கப்பட்டு இருப்பது,  நடுத்தர மக்களுக்கு மேலும் ஒரு பலத்த அடியாக விழுந்துள்ளது. பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலைக் கருத்தில் கொண்டு விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டுவந்த கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டம் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’.

இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

Leave a Reply