- செய்திகள், தேசியச்செய்திகள், வணிகம்

மத்திய அரசின் தங்க டெபாசிட் திட்டத்தில் 40 கிலோ தங்கம் முதலீடு…

(வர்த்தகம்) ஆதரவு

மும்பை சித்திவிநாயகர் கோவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தது. இந்த கோவில் நிர்வாகத்திடம் தற்போது 160 கிலோ தங்கம் கைவசம் உள்ளது. மத்திய அரசின் தங்க டெபாசிட் திட்டத்தில் 40 கிலோ தங்கம் முதலீடு செய்ய உள்ளதாக அண்மையில் தெரிவித்தது. சீரடி சாய்பாபா கோவில் நிர்வாகமும் இந்த திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுடன் உள்ளது. திருமலை திருப்பதி கோவில் நிர்வாகமும் இந்த திட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தது.

கேரளாவில் உள்ள பிரபல கோவில்கள் இந்த திட்டத்தில் பங்கு கொள்ளுமா என்பது சந்தேகம்தான். அம்மாநில தேவஸ்தான அமைச்சர் வி.எஸ். சிவகுமார் இது குறித்து கூறுகையில்,`தேவஸ்தான வாரியங்கள் சுயாட்சி அமைப்புகள் என்பதால் இது போன்ற விஷயங்களில்  மாநில அரசு எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க முடியாது. அந்த கோவில் தேவஸ்தானங்களே இது குறித்து முடிவு எடுக்கும்' என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply