- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உருவப்பொம்மை எரிப்பு

சென்னை,பிப்.17-
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை தலைவரை கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாணவர்கள் அனைவரையும் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்ததைக் கண்டித்தும், ‘கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவின் புற்றுநோய்’ என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதைக் கண்டித்தும் சென்னை பல்கலைக்கழக மாணவர் சங்கம், இந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் சென்னை பல்கலைக்கழகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசைக் கண்டித்தும், ஆர்.எஸ்.எஸ்., போன்ற இந்துத்துவா அமைப்புகளை கண்டித்தும், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உருவப்பொம்மையை எரித்தனர்.

Leave a Reply