- செய்திகள், நாகபட்டினம், மாவட்டச்செய்திகள்

மதுவை ஒழிப்போம் – மதியை வளர்ப்போம் கருணாநிதி பேச்சு…

நாகை,ஏப்.26-
மயிலாடுதுறையில் நடந்த பொதுக்கூட்டத்தில், மதுவை ஒழிப்போம் – மதியை வளர்ப்போம்  என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
பொதுக்கூட்டம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில்  தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்தார். பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:  இளைஞர்களின் காலம் தற்போதைய காலம். இளைஞர்கள் சமுதாயப் பணியாற்ற முன் வர வேண்டும். இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம். இளைஞர்களால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. இளைஞர்களால்தான் நாட்டை உருவாக்கி வாழவைக்க முடியும்.
அரவணைக்கும் அமைப்பு
இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில்தான் நானும் செயல்படுகிறேன். தி.மு.கவினை பொறுத்தவரை சாதி, மதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டு அனைவரையும் அரவணைக்கும் அமைப்பு ஆகும். மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன்.
தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி என்ற பெயரில் காட்டாட்சி நடக்கிறது. எனவே நல்லாட்சி அமைய அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.கவிற்கு வாக்களிக்க வேண்டும். அமைதி, பொறுமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற வகையில் இளைய சமுதாயம் சீர்தூக்கி வளர வேண்டும். தி.மு.க. ஆட்சி அமைத்தால் முதல் கையெழுத்து மது ஒழிப்புதான். இனி மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன். மதுவை ஒழிப்போம் – மதியை வளர்ப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துகொண்டோர்
இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர் தி.மு.க நாகை மாவட்டச் செயலாளர் குத்தாலம், இந்திய யூனியன் முஸ்லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

Leave a Reply