- கரூர், செய்திகள், மாவட்டச்செய்திகள்

மதுக்கடைகளை மூட வலியுறுத்திய மக்கள் அதிகார அமைப்பினர் கைது…

 

கரூர், ஏப்.2-
தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி பல இயக்கங்கள் போராட்டக்களத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில்  மக்கள் அதிகாரம்  அமைப்பின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமையில் மதுக்கடைகளை மூடக்கோரி கரூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும்போது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என போலீசார் தடை விதித்தனர். அப்போது மக்கள் அதிகார அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனாலும், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மக்கள் அதிகார அமைப்பினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.

Leave a Reply