- செய்திகள், மகளிர்

மண்டே ஃபீவர்

 

உபயோகமான உரையாடல்
‘‘என்ன நேத்திக்கு தான் சண்டே.  வெளியிலே பார்க்க முடியலை.  இன்னிக்கு என்னாச்சு… தலைகாட்டமாட்டேங்கற…’’
‘‘சண்டே மாதிரி, மண்டேயும் வேலைதான் ராணி’’
‘‘சண்டே எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செஞ்சா… மண்டே எப்படி ரிலாக்ஸ்டா இருக்க முடியும்?’’
‘‘நீ வேற… நான் மண்டே வராததுக்கு என் புருஷன் தான் காரணம்.  மண்டே வந்தாலே… வேலைக்கு லீவு சொல்லிடறாரு. சரியான சோம்பேறி…’’
‘‘அப்படியெல்லாம் திட்டாத.  இன்னைக்கு வேலைக்கு போற பெரும்பாலானவங்களுக்கு ‘மண்டே பீவர்’ நோயா வந்திடுச்சு.  பெரிய நிறுவன அதிகாரிங்களோட புலம்பலும் இதுதான்.  எதிர் வீட்டுல இருக்காரே, ராமு, அவர் தனியார் நிறுவன ஹெச்.ஆர். அதிகாரி.  போன மாசம் இதைப் பத்திதான் பேசிட்டிருந்தாரு. மண்டே வந்தால், காலை 9 மணி லேர்ந்து அவருக்கு போன் வந்திட்டே இருக்குமாம். ‘சார்… நான் இன்னிக்கு லீவு.  உடம்பு சரியில்லை… என் அக்காவை ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்.  குழந்தைக்கு காய்ச்சலா இருக்கு’ன்னு. ஏன்னா, வாரத்துல ஒரு நாள் கிடைக்கிற அந்த சண்டேலயும், சினிமா போறது, லேட்டா தூங்கறது.  வெளியில் சாப்பிடறதுன்னு இருந்திடறதால… ராத்திரி அடிச்சு போட்ட மாதிரி தூங்கிடறாங்க.  காலையில் எழுந்தா, எல்லாருக்குமே அய்யய்யோ… இன்னிக்கு ஆபீஸ் போகனுமான்னு  யோசிச்சு, ஒரு காரணத்தை சொல்லி, லீவை போட்டுடறாங்க.  ஆபீஸ் பைலை போய் பார்த்தால், பலரும் வருஷத்துக்கான லீவுல திங்கட்கிழமைதான் அதிகமா லீவே எடுத்திருக்காங்களாம்’’
‘‘சரியா சொன்ன ராணி. நாங்களும் நேத்திக்கு நைட்ஷோ போயிட்டு லேட்டாதான் வந்தோம். என் வீட்டுக்காரரும், அவரோட மேலதிகாரிக்கு லீவு சொன்னாரு. எனக்கே கூட கஷ்டமா இருக்கும்.. அதுக்கு என்ன தான் வழி’’
‘‘சண்டே எங்க வேணா போங்க. ராத்திரி 7 மணிக்குள்ள வந்திடுங்க.  ஹெவியா சாப்பிடாதீங்க.  8 மணிக்குள்ள தூங்கிடுங்க.  கண் எரிச்சல் இருக்காது.  தூக்கத்துனால, நல்ல ரெஸ்ட் கிடைக்கும்.  உடம்பும், மைண்டும் ஃப்ரெஷ்ஷாயிடும். என்ன வேலை செய்யனும்.  எதெல்லாம் முடிக்கனும்னு பிளான் பண்ணுங்க.  எல்லாமே நம்ம மைண்ட் செட்தான்.  வார முதல் நாள், மாத முதல் நாள்னு எந்த முதல் நாளிலும் லீவு எடுக்காம இருக்கிறதுதான் நம்மளோட ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் நல்லது’’
‘‘என்னவரை ஃப்ரெஷ்ஷாக்கவேண்டியது என்னோட கடமை.  தாங்க்ஸ் ராணி’’

Leave a Reply