- செய்திகள்

மணல் கடத்திய 12 பேர் கைது காஞ்சிபுரம் அருகே…

காஞ்சிபுரம், ஆக.19-
காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணல் கடத்தல்
காஞ்சிபுரம் உப்பேரிக்குளம் தெருவில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார்.
2 பேர் கைது
அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்தியது தெரிந்தது. இதையொட்டி, சாலபோகத்தை சேர்ந்த பக்தவச்சலம் (வயது 61), பிரசாந்த் (வயது25,) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மாகரல் அருகே
அதேபோல், காஞ்சிபுரம் அருகே மாகரல் அடுத்த வளத்தோட்டம் ஜங்சனில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரைக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரிந்தது.
10 பேர் கைது
இதையொட்டி குருவிமலையை சேர்ந்த வரதன் (வயது31), முனியன் (43), சின்ன ஐயங்குளத்தை சேர்ந்த வெங்கடேசன் (23), களக்காட்டூரை சேர்ந்த ரவி (46), ரமேஷ் (37), கனிஇலுப்பை சேர்ந்த ஆதிகேசவன் (45), சுப்பிரமணி (38), மேலமையூரை சேர்ந்த குமரேசன் (34), நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பஞ்சாட்சரம் (50), மேனலூரை சேர்ந்த நந்தன் (49) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply