- செய்திகள்

மணல் கடத்தியவர் கைது காஞ்சிபுரம் அருகே…

காஞ்சிபுரம், ஜூலை.29-
காஞ்சிபுரம் அருகே ஒரிக்கை பகுதியில், பாலாற்றில் இருந்து அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில், மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரைக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் ஓரிக்கை ஜங்சன் என்ற இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்தியது தெரிய வந்தது. அதையடுத்து, காஞ்சிபுரம் ஓரிக்கையை சேர்ந்த பிரதாப் (வயது24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply