- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

மக்கள் நலக் கூட்டணி ஆதரவு கிடைத்துள்ளது

சென்னை, பிப். 29-
எங்கள் கூட்டணிக்கு பிரமிக்கதக்க வகையில் ஆதரவு கிடைத்துள்ளது. மக்கள் நலக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று வைகோ கூறினார்.
மாணவரணி கூட்டம்
ம.தி.மு.க. மாணவர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை, எழும்பூரில் ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது. மாநில மாணவர் அணி செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வேண்டுகோள்
* ஊழலை முற்றாக ஒழித்திடவும், மது இல்லாத தமிழகம் மலர்ந்திடவும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பும், மாணவர்களுக்கான தரமான கல்வி உள்ளிட்ட பல்வேறு உரிமைகளையும், சலுகைகளையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள ‘ குறைந்த பட்ச செயல் திட்டம்’ வெளியிட்டு, மக்களின் பேராதரவைப் பெற்று வருகின்ற மக்கள் நலக் கூட்டணியை வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறச் செய்ய தமிழக மாணவர்கள், இளைஞர்கள் ஒருங்கிணைந்து அணி திரள பாடுபடுவோம்.

கவனத்தை ஈர்க்க

* தமிழகம் முழுவதும் ஒரு கோடி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கவனத்தை ஈர்கின்ற விதமாக ‘மாற்றத்துக்கான மாணவர்- இளைஞர்கள் சந்திப்பு’ எனும் பயணத்தை மார்ச் 2-வது 3-வது வாரங்களில் மேற்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது. மேற்கண்டவை உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வைகோ பேட்டி
கூட்டத்திற்கு பிறகு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சி அமைப்போம்
தமிழக சட்டசபை தேர்தல் பணிகள் குறித்தும், மக்கள் நல கூட்டணி வெற்றி வாய்ப்பு குறித்தும் ஆலோசிக்க கட்சியின் மாணவரணி ஆலோசனை கூட்டத்தை நடத்தினோம். தமிழகத்தில் பிரமிக்கதக்க வகையில் மக்கள் நல கூட்டணிக்கு பேரதரவு கிடைத்துள்ளது. இளைஞர்கள், மாணவர்கள், சமூக வலைதளங்கள், முகநூல், குறுஞ்செய்தி மூலமும் ஆதரவு கிடைத்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் இடையே பெரும் ஆதரவு மக்கள் நல கூட்டணிக்கு கிடைத்து உள்ளது. மக்கள் நலக்கூட்டணி வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். ஊழல், மது, இல்லாத தமிழகத்தை உருவாக்க மக்கள் நலக்கூட்டணி பாடுபட்டு வருகிறது.

இந்தியாவின் ஒருமைபாடு சுக்குநூறாக நொறுங்கி போய் விடுமோ என்ற நிலை தற்போது நிலவுகிறது. சமஸ்கிருத மொழி திணிப்பு கண்டிக்கத்தக்கது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகையால் தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மக்கள் நலக் கூட்டணிக்கு வரும்.
இவ்வாறு வைகோ கூறினார்.

Leave a Reply